நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தி நடித்திருந்தார். இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியா 11 வயதில் தனக்கு நடந்த கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் ஃபேமிலியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, என் முதுகுக்கு பின்னால் கை வைப்பதை உணர்ந்தேன்.
அது அப்பாவின் கை என நினைத்தேன். ஆனால், அந்த கை என் டீ சர்ட்டுக்குள் வந்தபோது, அப்பாவை பார்த்தேன். அப்பா கை முன்னால் இருந்தது. அதன்பின், நானே அதை சரி செய்து கொண்டேன். இதை அப்போது ஏனோ நான் யாரிடமும் கூறவில்லை என்றார்.