என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு என்ற பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் சார்பில் நேற்று “என் குப்பை என் பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, துணை தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் இவர்கள் அரிச்சந்திரா நதியின் ஆற்றங்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்ட கூடாது என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து நடைபெற்ற மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்துள்ளனர்.