கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள மாநகரில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் என்று தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகரத்தை தூய்மைபடுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிவாரியாக குப்பைகளை அகற்ற உள்ளது.
இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பைகளை சேகரித்து ஒசூர் மாநகர மேயர் சத்யா அவர்கள் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது ஓசூர் மாநகர ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா மாமன்ற உறுப்பினர்கள் N.S மாதேஸ்வரன், சென்னீரப்பா, காந்திமதி கண்ணன், மோசின் தாஜ் நிசார், பெருமாயி அருள், மாதேஷ், தேவி மாதேஷ், குரு மஞ்சுளா, கிருஷ்ணன், சிவராமன் மற்றும் புஷ்பா ஆகியவர்கள் உடன் இருந்தார்கள்.