சுவாரா பாஸ்கர் இந்திய நடிகை ஆவார். இரண்டு திரை விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமான மேட்ஹோல்ல் கீப் வாக்கிங்கில் ஓரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் அப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது. தனு வெட்ஸ் மனு இல் மணமகள் என்ற தனது துணைப் பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரம் பெற்றார்.
இந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றார். அப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.தன் காதல் வாழ்க்கை சீரழித்தது நடிகர் ஷாருக்கான்தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், ஷாருக்கானின், ஒரு படத்தை சிறு வயதில் இருந்து பார்த்துவிட்டு அன்றிலிருந்து ஷாருக்கான் போல இருக்கும் மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. இப்போது என்னால் யாரையும் டேட்டிங் செய்ய முடியாது. எனக்கு அதற்கான சக்தி இல்லை என்று கூறியுள்ளார்.