சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ், இசையமைப்பாளர் கோபி சுந்தரை கணவராக அறிவித்துள்ளார். பாலாவும். அம்ரிதாவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து கடந்தாண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து கோபி சுந்தரை அம்ரிதா காதலித்து வருவதாக பேசப்பட்டது. மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் அவருடைய அம்ரிதா சுரேஷின் சகோதரி ஆகியோர் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்ட அம்ரிதா, “எனக்கு இது மிகவும் சிறப்பான நாள். என் கணவரே நீ சிறப்பானவர்” என்று குறிப்பிட்டுள்ளார். கோபி சுந்தரை அம்ரிதா கணவர் என குறிப்பிட்டுள்ளதால் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.