பாமக நிறுவனர் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவன ராமதாஸ் தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இவர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல், சமூகம் போன்ற பதிவுகளை மட்டும் இன்றி தன் வாழ்வில் நிகழும் சுவாரசியமான நிகழ்வுகளையும் பதிவிட்டு தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். அதேபோல் தற்போது தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி அரங்கத்தில் சமூக நீதி சார்ந்த பல வழக்குகளில் எனக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி அவர்களின் முத்துவிழா நடைபெற்றது. இதற்கு நான் சென்றேன். பின்னர் நான் ஒரு கை கடிகாரம் வாங்க வேண்டும் என்பதற்காக அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு கடைக்கு சென்றேன்.
பின்னர் அங்கு கை கடிகாரத்தின் விலை பற்றி விசாரித்து. அப்போது கடையின் ஊழியர் ஒருவர் பத்தாயிரம் மதிப்புள்ள கடிகாரத்தை காட்டினார். நான் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் விலையில் கடிகாரங்கள் இல்லையா என்று கேட்டேன். அதற்காக கடிகாரங்கள் உள்ளது ஐயா, ஆனால் இந்த கடிகாரம் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதனை கேட்ட நான் உடனடியாக பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொண்டேன். அதன் பின்னர் அந்த கடிகாரத்தை கடையின் நிர்வாகி எனக்கு கட்டி விட்டார். பின்னர் மகிழ்ச்சியாக வீடு திரும்பினேன் என கூறிய அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது