Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என் இதயத்தை 0.3 மில்லிசெகண்டில் உருக்கிவிட்டாள்’… நடிகை ராஷ்மிகா டுவீட்…!!!

நடிகை ராஷ்மிகா தனது நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார். தற்போது இவர் புஷ்பா, மிஷன் மஞ்சு உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் .

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது செல்ல நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே நான் எனது சந்தோஷத்தை கண்டுபிடித்துவிட்டேன். நான் இப்போது ஆராவை அறிமுகம் செய்து வைக்கிறேன். 3 நொடியில் ஒருவரை காதலிக்க முடியும் என சொல்வார்கள் . ஆனால் அவள் என் இதயத்தை 0.3 மில்லி செகண்டில் உருக்கிவிட்டாள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |