Categories
தேசிய செய்திகள்

“என் ஆட்டை திருடியது நீதான்”…? ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது…!!!!

தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் விசாரித்துள்ளார் அப்போது அவருடன் அமர்ந்து மது அருந்தி இருக்கின்றனர். மதுபோதையில் இருந்த சின்னசாமி எனது ஆட்டை திருடியது நீதான் என ரஞ்சித் மீது பழி சுமத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது அங்கு சென்ற அய்யாசாமி என்பவர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் தன்னை ஆடு திருடியவன் எனக் கூறிய காரணத்தினால் ஆத்திரமடைந்த ரஞ்சித் வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கியால் சின்னசாமியை முதுகிலேயே சுட்டு கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |