மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் டார்ச்சரால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுரை அவனியாபுரம் பத்மா தியேட்டர் எதிரில் உள்ள மூன்று மாடி காலனியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துராமலிங்கம் இளையமகன் மாரிச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், வீட்டில் தனியாக இருந்த தந்தையை காவல்துறையினர் வீட்டிற்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க முற்பட்டதாக கூறி தகவல் தெரிவித்துள்ளார். முதியவர் என்றும் பாராமல் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் டார்ச்சரால் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.