நடிகர் விவேக் காலம் ஆகி விட்டார். அவரின் கனவான ஒரு கோடி மரக் கன்றுகள் நடுகின்ற இலக்கில் இதுவரை விவேக் முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கின்றார்.
இப்போ அந்த ஒரு கோடி இலக்கை எட்டனும்ன்னு பல NGO, ரசிகர்கள் எல்லாம் மரம் நடுற முயற்சியில இறங்கிருக்காங்க . பலர் மரக்கன்றுகளை நட்டு வச்சு அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எல்லாரையும் மரம் நட்டு வைக்க சொல்லிட்டு வராங்க. தற்போது நடிகர் அருண் விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பாக அருண் விஜய் ரசிகர்கள் மரம் நட்டு இருக்காங்க. அந்த போட்டோவை தன்னோட ட்விட்டரில் ஷேர் செய்த அருண் விஜய், என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி, இது தொடரட்டும்னு பதிவிட்டுள்ளார்.
என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி!!🙏
இது தொடரட்டும்… pic.twitter.com/1pLN1NQHzy— ArunVijay (@arunvijayno1) April 18, 2021