பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் 99 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வின்ஸ்டன் கோட்டையில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வின்ஸ்டர் கோட்டையில் இறுதி சடங்குகள் மைதானத்திற்குள் நடைபெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு, ராயல் குடும்பத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
The Prince of Wales pays tribute to The Duke of Edinburgh on behalf of The Royal Family. pic.twitter.com/tDP0rkKGzc
— Clarence House (@ClarenceHouse) April 10, 2021
அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் மற்றும் என் குடும்பத்தினர் நீங்கள் நினைக்கும் அளவிற்கு தந்தையை பெரிதும் இழக்கிறோம், என் அன்பு மிக்க தந்தை மிக சிறப்புடையவராக இருந்தார், அனைத்திற்கும் மேலாக அவரைப் பற்றி கூறப்பட்ட எதிர்வினை மற்றும் நெஞ்சை நெகிழச்செய்யும் விஷயங்களால் ஆச்சரியமடைந்துள்ளேன், அந்த வகையில் என் குடும்பம் அதற்காக என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த 70 வருடங்களாக என் தந்தை மகாராணிக்கும், என் குடும்பத்தினருக்கும் மற்றும் நாட்டிற்கும் காமன்வெல்த் அனைத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார் என்று குறிப்பிட ஆசைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.