சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் மகா மற்றும் ரவீந்திரரின் திருமணம் தான் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே இது 2-வது திருமணம் தான். இதில் மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தர் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத மகா மற்றும் ரவீந்தர் ஜோடி ஹனிமூன், குலதெய்வ கோவிலில் வழிபாடு என பிசியாக இருக்கின்றனர். இதனையடுத்து மகாலட்சுமி தன்னுடைய கணவர் ரவீந்திரருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். என் இதயத்தை பிடித்துக் கொள்ளுங்கள். எப்போதும் என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய கணவர் தன்னை விட்டு விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக மகாலட்சுமி இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.