“கட்டா குஸ்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “கட்டா குஸ்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த திரைப்படத்தில் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த “கட்டா குஸ்தி” திரைப்படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Can't wait to see @TheVishnuVishal and #AishwaryaLekshmi together in #GattaKusthi (Tamil) and #MattiKusthi (Telugu).
Here are the second look posters of this grand family entertainer that's on the way to cinemas soon! @thanga18 pic.twitter.com/vWLptf9rPd
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) November 3, 2022