Categories
உலகசெய்திகள்

என்ன…! பூனைக்கு மேயர் பதவியா…? எப்படின்னு தெரியுமா…? இதோ வெளியான சுவாரஸ்ய தகவல்….!!

அமெரிக்காவிலுள்ள சிறிய நகரத்தின் மேயராக பெரிய கண்களையுடைய பூனை ஒன்று  பதவி ஏறியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஹெல் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நிர்வாகம் 100 டாலர் பணம் செலுத்தி விட்டு அதன் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரிய கண்களுடனும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்த பூனை ஜிங்ஸ்ஸின் உரிமையாளர் ஹெல் நகர நிர்வாகத்திற்கு 100 டாலர் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ஜிங்ஸ் பூனை ஒரு நாள் மட்டும் ஹெல் நகரின் மேயர் பதவியை வகித்துள்ளது. இந்த நகரில் வெறும் 72 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |