Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டையே கடலில் மூழ்கடிக்க…. நீர்மூழ்கிக் கப்பலை…. ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள அதிபர்…..!!!

பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக  வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன.

அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும். ரஷ்யா அதிபர் புதின் ஆதரவாளர் ஒருவர் அந்த நீர்மூழ்கியைக் குறித்துக் கூறியதாவது, “அது முழு பிரிட்டன்  நாட்டையே கடலின்  ஆழத்தில் மூழ்கடிக்கும் திறன் கொண்டது” என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |