சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் கழுவும் சிங் எப்போதுமே அழகுடன் காணப்படும். அதனை சுத்தம் செய்வது மிகவும் சிரமம். எளிதில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
பாத்திரம் கழுவும் சோப்பு, பேக்கிங் சோடா மற்றும் டீ கிரீஸர் ஆகியவற்றை பயன்படுத்தி சிங்கை சுத்தம் செய்யலாம். இதனை பயன்படுத்தி வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்தால் புதியது போல் வைத்திருக்கலாம். நீர் வெளியேறும் குழாய் சிங்கின் உட்புறம் என மூளை முடுக்குகளில் எல்லாம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சிங்கில் உள்ள எண்ணெய் பசை போக்குவதற்கு பேக்கிங் சோடா மற்றும் சோப்பு கலவை பயன்படுத்தினால் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். நீர் வெளியேறும் குழாய் பகுதியை சுத்தம் செய்ய சிறிய பிரஸ் ஒன்றை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பல் துலக்கும் பிரஸ் கூட பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரை வடிகால் வழியாக ஊற்றி அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றலாம்.
சிங்கை சுத்தமாக வைத்திருக்க சமையலறையில் உள்ள சிங்கில் காய்கறி போன்ற கசடுகளை கொட்ட கூடாது. இவ்வாறு செய்தால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும். வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு இரும்பு அலசல் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் தாள் ஒன்றை வைத்து அதன் மேல் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் கல் உப்பை போட்டு சிறிதளவு வினிகர் சேர்த்து,வினிகர் இல்லை என்றால் எலுமிச்சை பழ சாற்றைப் பிழிந்து சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
அதன் பிறகு அந்த டிஷ்யூ தாளை எடுத்து சிறிதளவு தண்ணீர் சுடவைத்து சிங்கிள் நீர் வெளியேற்று குழாய் வழியாக ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்கையில் உணவு கழிவுகள் மற்றும் முடி ஏதேனும் அதில் சிக்கிக் கொண்டிருந்தால் விடுபட்டு அடைப்புகள் நீங்கி தண்ணீர் வேகமாக கீழ்நோக்கி இறங்கி விடும். எனவே சமையலறை சிங்கை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அது நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியத்தை வழங்கும்.