இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பலவிதமான வீடியோக்கள் சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் தன்னுடைய உரிமையாளரின் கால் உடைந்ததால் அவரைப் போல் கேலி செய்யும் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. புதுவிதமான விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
அவ்வகையில் உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டதால் காலை கீழே இறக்கி வைக்க முடியாமல் ஒற்றை காலில் நடந்து செல்ல அவர் முயற்சிக்கிறார். இதனைப் பார்த்த அவரின் நாய் உரிமையாளரைப் போலவே ஒற்றை காலை மடக்கிக்கொண்டு நடித்துக் காட்டுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
https://twitter.com/Yoda4ever/status/1596467553215258629