Categories
சினிமா

“என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டுவேன்”…. நேற்றைய எபிசோட்…. இதோ உங்களுக்காக…!!!!!!

என்ன நடந்தாலும் ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என கோபி உறுதியாக கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று நடந்ததை பார்க்கலாம். எழில் தன்னை தயாரிப்பாளர் தன்னுடைய  இஷ்டத்திற்கு பணத்தை உருவாக்குமாறு சொன்னதாக மிகவும் சந்தோஷமாக கூறுகின்றார். மேலும் இதை அமிர்தாவுக்கும் போன் செய்து கூறுகின்றார். ஆனால் வர்ஷினியுடன் பைக்கில் வந்த விஷயத்தை சொல்ல மறந்து விடுகின்றார். இதனால் குழப்பமடையும்  அமிர்தா அவர் ஏன் இதை சொல்லாமல் விட்டார். ஒரு வேலை அவர் மனதில் நாம் சரியாக இடம் பிடிக்கவில்லையோ என குழப்பம் அடைகிறார்.

மீண்டும் போன் செய்து எழில் ஒன்று சொல்ல மறந்து விட்டதாக கூறி உங்கள் வீட்டு வழியாகத்தான் வந்ததாகவும் வர்ஷினி வந்த விஷயத்தையும் கூறுகின்றார். இதை அடுத்து அமிர்தா நிம்மதி அடைகிறார். மற்றொரு பக்கம் ராதிகா மிகவும் சோகமாக அமர்ந்திருக்க அவரின் அண்ணன் என்ன விஷயம் என கேட்கின்றார். திருமணம் சரியாக தானே நடக்கும் அண்ணா? எனக்கு கவலையுடன் கேட்கிறார் ராதிகா. எல்லாம் சரியாகத்தான் நடக்கும். நீ இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறுகின்றார்.

அப்போது வரும் கோபியிடம் ராதிகாவின் தாயார் நீங்கள் திருமணம் குறித்து உங்க வீட்டில் யாரிடமாவது கூறினீர்களா என கேட்க, என் அம்மாவிடம் கூறினேன் எனக் கூறுகின்றார் கோபி. உங்க அம்மாவிடமா? அவர் போதும் முன்னதாக வீட்டிற்கு வந்து எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? கண்டிப்பாக அவர் திருமணத்தை நடத்த விட மாட்டார் என ராதிகாவின் தாய் பயப்படுகிறார். அதற்கு கோபி அம்மா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க.

நான் என்ன நடந்தாலும் ராதிகாவின் கழுத்தில் தாலி கட்டுவேன் என உறுதி அளிக்கின்றார். இது ஒருபுறம் இருக்க பாக்கியம் தனது வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு ரிசப்ஷனுக்கு சமைக்க கல்யாணம் மண்டபத்திற்கு புறப்படுகின்றார். அப்போது ஜெனி நான் உங்களோடு வருகிறேன் என கூறுகிறார். அதற்கு செழியன் அம்மாவுடன் செல்லக்கூடாது என தடுக்கின்றார். ஆனால் ஜெனி, செழியனின் பேச்சை மீறி புறப்படுகின்றார்.

Categories

Tech |