Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன தவறு செய்தார்?…. சொதப்பும் பண்டுக்கு இடமா?….. நானாக இருந்திருந்தால்…. சஞ்சுக்கு ஆதரவு கொடுக்கும் பாக் வீரர்.!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்திற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறினார்.

2022 டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.. 3 தொடரில் ஒன்றில் கூட இடம்பெறாததால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. 27 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்று கடுமையாக சாடினர்..

ஏனெனில் ரிஷப் பண்ட் ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கில் சொதப்பினார். அவரது பேட்டிங் தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் அவரது விக்கெட் கீப்பிங்கிற்காகவும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் ஆசிய கோப்பையில் 3 இன்னிங்ஸ்களில் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார், மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 125 க்கும் குறைவாக இருக்கிறது. இப்படி மோசமான பார்மில் இருக்கும் இவரை தேர்வு செய்யலாமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்..

சஞ்சு மீண்டும் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டு சில கிரிக்கெட் ரசிகர்களும், சில முன்னாள் வீரர்களும் வியந்தனர். அவர்களில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் ஒருவர், ஆம் இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது யூடியூப் சேனலில் வீடியோவில் கூறியதாவது, சாம்சன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும் என்றும், ரிஷப் பண்டை விட அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் இந்தியாவுக்காக விளையாடிய குறைந்த போட்டிகளில் கூட தனது தகுதியை நிரூபித்தார். .

“சஞ்சு சாம்சன் போன்ற ஒருவருக்கு இது கொஞ்சம் அநியாயம். டி20 உலகக் கோப்பை அணிக்கு அவர் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். இடம் கிடைக்காதா அளவுக்கு அவர் என்ன தவறுசெய்தார்? ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் சொந்தத் தொடர்களுக்கும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். நானாக இருந்தால் ரிஷப் பந்திற்கு பதிலாக சாம்சனை தேர்ந்தெடுத்து இருப்பேன். இந்தியா அதே தவறுகளை மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனை படைத்துள்ளதால் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது சமீபத்திய ஃபார்ம் டி20 கிரிக்கெட்டில் அவ்வளவு சிறப்பாக இல்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக அவரது பேக்-ஃபுட் ஆட்டம் அபாரமானது, ஐபிஎல்லின் போது நீங்கள் பார்த்திருக்க வேண்டிய சில ஷாட்கள், பிக்-அப் புல், கட் ஷாட்கள், பந்து வீச்சாளர் தலைக்கு மேல் தூக்கியடிப்பது, அந்த வகையான ஷாட்கள் விளையாடுவது எளிதானது அல்ல, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது, ​​உங்களுக்கு அந்த வகையான ஷாட்-மேக்கிங் திறன் தேவை என்று நான் நம்புகிறேன், சாம்சனிடம் அது இருக்கிறது. அவர் தனது திறமையை அதிகபட்சமாக பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்” என்று ரோஹித் சர்மா கூறினார். ஆனால் அவரை அணியில் எடுக்கவில்லை.

Categories

Tech |