Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்யலாம் ? மாவட்டங்களில் எப்படி இருக்கு? கேட்டறிகிறார் முதல்வர் ….!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல மூத்த அமைச்சரான CV சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கொரோனா வைரஸ் பரவல் என்பது சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மாவட்டங்களில் எது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஏனென்றால் பெரும்பாலான அமைச்சர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் மாவட்டத்தில் இருக்க கூடிய களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக அமைச்சர்களிடம் கேட்டறிவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது தவிர தொழில் நிறுவனங்களுக்கான ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இன்றைய கூட்டதில்  இடம்பெறும் என்று எதிர்பார்ப்பது. ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன வாய்ப்புகள் உள்ளது.

Categories

Tech |