தமிழக எல்லையில் நுழைந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட, மீண்டும் ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வந்து கொண்டிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சசிகலா, இன்று தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் பெங்களூருவில் இருந்து கிளம்பும்போது ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் புறப்பட்ட காரில் அதிமுக கொடி பறந்ததால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா கார் வந்து கொண்டிருந்த போது, காரை வழிமறித்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு காரில் சசிகலா சென்னையை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் தனது காரில் மீண்டும் அதிமுக கொடியுடன் சசிகலா வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து சசிகலா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்திய கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல், தடையை மீறி அதிமுக கொடியுடன் காரில் செல்ல கூடாது என்று நோட்டீஸ் கொடுத்தார். ஆனாலும் சசிகலாவின் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்படவில்லை.