தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் OTT-யில் வெளியானது. அதனை தொடர்ந்து தனுஷின் “மாறன்” திரைப்படமும் OTT-யில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இவ்வாறு தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT-யில் வெளியாவதால் ரசிகர்கள் அவரை திரையில் காண முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இயக்குனரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் “சாணிக்காகிதம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அண்மையில் இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “சாணிக்காகிதம்” திரைப்படம் ஏப்ரல் மாதம் OTT-யில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் OTT-யில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவருடைய அண்ணன் செல்வராகவன் நடித்த படங்களும் OTT-யில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.