Categories
தேசிய செய்திகள்

என்ன கூப்பிட்டு போய்டு…. “ஜே ஜே” பட பாணியில்…. 10 ரூபாயில் தூது விட்ட காதலி…!!!!

மாதவன் ஹீரோவாக நடித்திருந்த ஜே ஜே படத்தில் 100 ரூபாய் நோட்டில் தனக்கென நாயகி எழுதியிருந்ததை தேடி அலையும் காட்சிகள் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அது போலவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, விபுல் என்ற ட்விட்டர் பயணரின் பதிவுதான் நெட்டிசன்களிடையே ஹாட் டாபிக்காக அமைந்திருக்கிறது.

அதில், 10 ரூபாய் நோட்டில் “விஷால் வருகிற ஏப்ரல் 26ம் தேதி எனக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். தயவுசெய்து எப்படியாவது என்னை உன்னுடன் அழைத்து சென்றுவிடு. ஐ லவ் யூ. உன்னுடைய குசும்” என எழுதி தனது காதலனுக்காக பெண் ஒருவர் இவ்வாறு எழுதியிருக்கிறார். இது தொடர்பான ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்யும் இணையவாசிகள் கிண்டலடித்தும், அந்த ஜோடி விரைவில் ஒன்றிணைய வேண்டும் என தத்தம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |