Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது சகோதரிகளுக்கு பணம் நகை கொடுத்திருப்பதாகவும், அதனை திருப்பி கொடுத்தல் வீட்டுமனையை கிரயம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து நேற்று காலை பாப்பாத்தி வீட்டிற்கு அருகே செல்வி விஷ பாட்டிலை கையில் வைத்துகொண்ட படி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக நாமகிரிபேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |