திடீரென கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று திடீரென சங்கீதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகர் சங்கீதாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கீதா கர்ப்பமாக இருப்பதால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கீதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணம் முடிந்த 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் இறந்ததால் இந்த வழக்கை உதவி ஆட்சியர் சித்ராவிஜயன் விசாரித்து வருகிறார்.