Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. காதலியை “ரயிலின் முன்பு தள்ளிவிட்ட sub inspector மகன்…. அதிரடி விசாரணையில் தனிப்படைகள்….!!!!

காதலியை  வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா சதிஷ்  ஆகிய 2 பேரும்  ஒரு  ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அதேபோல் நேற்றும் இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து சதீஷ் ஓடும் ரயிலின் முன்பு சந்தியாவை தள்ளி விட்டுள்ளார். இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 4 தனி படைகளை அமைத்துள்ளனர்.  இந்நிலையில் சதீஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |