திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதனையடுத்து இன்றும் 230- க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 100-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிருடன் இருந்துள்ளது. அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விடுவதற்கான நடவடிக்கையில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த அனைத்து திமிங்கலங்களும் உணவு தேடி புதிய இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் திடீரென உடல்நிலை பாதிப்பால் கரை ஒதுங்கி இருக்கலாம். என கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 470 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.