ஒரு வாலிபர் தனக்கு விருப்பமான பீட்சாவை திருமணம் செய்துள்ளார்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ரைஸ் குக்கர் சாதம் மட்டும் தான் தருகிறது. அதைத் தவிர வேறு எதுவும் தரவில்லை எனக் கூறி விவாகரத்து செய்து கொண்டார். இந்த முட்டாள்தனமான செயலை பலரும் அறிந்திருப்பர்.
இதேப்போன்று ரஷ்யாவை சேர்ந்த 22 வயது வாலிபர் அவருடைய விருப்பமான பீட்சா கடையில் இருந்த ஒரு பீட்சாவை தன்னுடைய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்த வாலிபர் திருமணம் முடிந்த பிறகு பெண்கள் தான் எப்போதும் ஆண்களை ஏமாற்றுவார்கள். இந்த பீட்சா ஒருபோதும் என்னை ஏமாற்றாது என கூறியுள்ளார். இதைப் பார்க்கும் போது நாட்டில் இப்படி கூட முட்டாள்கள் இருக்கிறார்களா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.