Categories
மாநில செய்திகள்

என்ன ஒரு பாசப்பிணைப்பு….! “மரணத்திலும் இணை பிரியாத பாசமலர்கள்”….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்களின் பாச பிணைப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பாசமலர்கள் என்று கேட்டவுடன் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திரைப்படமே நமக்கு ஞாபகம் வரும். அந்த படத்தில் இருவரும் அவ்வளவு பாசுப்பிணைப்புடன் இருப்பார்கள். அதேபோல் ராதாம்மா மற்றும் கனக்கம்மா என்ற சகோதரிகள் ஒரே நாளில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதாம்மா.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அக்கா இறந்த செய்தியை கேட்ட தங்கை கணக்கம்மா, அதிர்ச்சியில் உறைந்துபோனார். சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள், கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என்று நினைத்து அனைவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். ஆனால், கனக்கம்மா அக்கா இழந்த செய்தியை கேட்டதும் உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்தது. அக்கா இறந்த செய்தியை கேட்டு துக்கம் தாலாமல் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |