நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கேரளா பாஜக ராஜ்யசபா எம்.பி. அல்போன்ஸ் முல்லை பெரியாறு அணை குறித்து பேசிய போது, கேரள பிரிக்கப்பட்டபோது முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் மட்டும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கேரளாவில் இயற்கையாகவே மழை அளவு அதிகமாக பெய்து வருவதால் தண்ணீரெல்லாம் அண்டை மாநிலமான தமிழகம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அதனை இலவசமாக பகிர்ந்துகொள்ள துணை ஒப்பந்தம் போட வேண்டும் என்று கேரள முதல்வரை நான் வலியுறுத்தி வருகிறேன். கேரளாவில் நுகரப்படும் உணவு மற்றும் காய்கறி வகைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் பேசும் மலையாள மொழி தமிழ் தமிழ் மொழியிலிருந்து கிடைக்கப்பெற்றது. மேலும் தமிழகத்திலிருந்து மதுவகைகள் வரவில்லை என்றால் கேரள மக்கள் பைத்தியம் ஆகி விடுவார்கள். எனவே கேரள மக்கள் சார்பாக தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முல்லை பெரியாறு அணை வழக்கில் நீதிமன்றத்தில் நாங்கள் தோற்று விட்டோம். முல்லை பெரியாறு அணை சுண்ணாம்பும், முட்டை வெள்ளைக்கரு மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டது.
இந்த அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த அணை இடிந்து விழுந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்கள் உலகில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பர். இந்த அணையை மறுகட்டமைப்பு செய்துகொள்ள சட்டத்தில் இடமில்லை. ஆனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய அணையை நாங்கள் கட்டிக் கொள்கிறோம். எனவே தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். கேரளாவை அமைதியாகத் தூங்கு விடுங்கள். இந்தியா ஒற்றுமையானது. நாம் அனைவரும் வேறு வேறு பகுதியில் இருந்து வந்தாலும் நாம் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.