உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாரில் உள்ள குவாசி கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணும், சந்தாஸ் கிராமத்தில் வசித்து வந்த ஒரு ஆணும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இதையடுத்து மனைவி குளிக்காத காரணத்தினால் கணவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். தனது திருமண வாழ்வை காப்பாற்ற அந்த பெண் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இந்த தம்பதியினருக்கு பெண்கள் பாதுகாப்பு மையம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் தனது மனைவியை அந்த நபர் குளிக்கச் சொல்வதெல்லாம் இருவர்களுக்கும் சண்டைகள் ஏற்படுவதாக கூறினார்.அந்த பெண் தனது திருமண வாழ்க்கையை தனது கணவருடன் வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால் கணவர் மனைவியருடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்து வாழ ஒரு துளிகூட விருப்பம் இல்லை என்றும் உறுதியாக கூறினார்.
இதையெடுத்து இந்த விவகாரத்து விண்ணப்பத்திற்கான காரணம் எந்த சட்டத்தின் கீழ் வராது என்பதால் மனுவே முன்னெடுக்க முடியாது என்று பெண்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் பாதுகாப்பு மையம் இந்த தம்பதியினருக்கு திருமண உறவைத் தொடர்ந்து வாழ்வதைப் பற்றி சிந்திப்பதற்காக அவகாசம் கொடுத்துள்ளனர். மேலும் இந்தப் பிரச்சினையை ஆலோசனை மூலமாக தீர்ப்பதற்காக முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.