Categories
உலக செய்திகள்

“என்ன என்ன பண்றாங்க பாருங்க”…. இணையதளங்களில் பரவும் வதந்திகள்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

உக்ரைன் ரஷ்யா போர் குறித்து இணையதளங்களில் பரவி வரும் விடியோக்கள் வதந்திகள் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ரஷ்யா உக்ரைன் போர் குறித்து வதந்திகள் அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புவதற்காகவே சிலர் நடித்து பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த பதிவினை மேற்கிந்திய நாடுகள் மிகைப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் புகைப் படங்களை தவிர்த்து இணையத்தளங்களில் பரவி வரும் பல்வேறு புகைப்படங்கள் போலியானவை என்றும் அவைகள்  சித்தரிக்கப்பட்டவை என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த வகையில் ரத்தம் சொட்ட சொட்ட நிற்பது போல பெண், இளைஞன் போன்ற புகைப்படம் இணையதளங்களில் போரை சார்ந்தே பதிவு செய்யப்பட்டது. அது போன்ற போட்டோகளின் நம்பகத்தன்மை குறித்து விசாரித்த போது அது போன்ற படத்திற்கும் போருக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர். மேலும் அந்த போட்டோ டிவி சீரியல்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்று தெரியவந்துள்ளது.

இதை போலவே உயிரிழந்தவர்களை மூட்டையில் கட்டி வைப்பது போல இடத்தில் இருந்து செய்தியாளர் ஒருவர் தொகுத்து வழங்கினார். அந்த வீடியோவில் மூட்டைகளில் ஒன்று தானாக நகர்வது போலவும் அதில் ஒருவர் வெளியே வருவது போலவும் பதிவாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் போருடன் தொடர்புபடுத்தி மேற்கத்திய நாடுகளின் திட்டம் இது என கேப்ஷன் கொடுத்து இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்ட காலநிலை  மேற்கொண்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உக்ரைனில் ரஷ்ய படைகள் போர் தொடுப்பதற்கு முன்னதாகவே உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்கள் போருக்கு தயாராகும் வாயிலாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில் மர துப்பாக்கிகளை வைத்து பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.

https://twitter.com/Karmabash/status/1490740372913508355?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1490740372913508355%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F131687%2FIs-that-Russia-Ukraine-war-Crisis-related-news-photos-and-videos-occupying-the-social-networking-sites-are-Fake

இந்நிலையில் இந்த வீடியோக்கள் எல்லாம் போரை சார்ந்தது இல்லை என்று சொல்லி நெட்டிசன்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |