நம்மில் பலர் கோபம் வரும்போது கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து விடுவோம். அது கையில் வைத்திருக்கும் செல்போன் ஆக இருந்தால் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். இந்நிலையில் பின்லாந்தில் கையில் வைத்திருக்கும் செல்போனை தூக்கி எறிந்தால் அதற்கு பணம் கிடைக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்.
அதாவது 22 வருடங்களாக பின்லாந்தில் phone through competition நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக தூரத்திற்கு தன்னுடைய செல்போனை யார் வீசுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார். இந்த போட்டியில் 220 கிராம் அளவு 400 கிராம் வரையிலான செல்போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்தப் போட்டியில் 110.4 கிலோ மீட்டர் தூரம் ஒருவர் செல்போனை வீசி உலக சாதனை படைத்துள்ளார்.