Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு…. “நடுரோட்டில் பாலத்திற்கு கீழே சிக்கிய ஏர் இந்தியா விமானம்”… வைரலாகும் வீடியோ…!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுரோட்டில் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் அருகே உள்ள டெல்லி-கூர்கான் ஹைவே பாதையில் பாலத்திற்கு கீழே விமானம் ஒன்று சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் பாதி பாகம் பாலத்தை கடந்து, மீதி பாகம் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இந்த விமானம் பயன்பாட்டில் இல்லாத விமானம் என்றும், இதை வேறு ஒருவர் வாங்கி விட்டதாகவும், அவருக்கு டெலிவரி செய்வதற்கு எடுத்துச் சென்ற பொழுது இப்படி சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் லாரியில் எடுத்துச் சென்ற டிரைவரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்துள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |