ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் பனி புயல் வீசுவதை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஜோர்டானிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்றுள்ளார்கள்.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால் அங்கு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அதிக அளவில் போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஜோர்டான் நாட்டின் எல்லையில் வீசும் பனி புயலை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவை பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் லாரியின் மூலம் போதை மாத்திரைகளை கடத்த முயன்றுள்ளார்கள்.
அப்போது அந்தக் கும்பலின் மீது ராணுவத்தினர்கள் சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்த அதிபயங்கர துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இருப்பினும் அதிகமானோர் சிரியாவிற்குள் தப்பிச் சென்றுள்ளார்கள்.