ஒரு கப்பலின் புகைப்படம் அதிசயமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஒரு கப்பலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அப்படி என்ன அதிசயம் இந்த கப்பலில் இருக்கிறது. அதாவது இக்கப்பல் கடலில் பறக்கிறதா? அல்லது மிதக்கிறதா? என்று பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது இந்த புகைப்படம் அந்த கப்பலில் இருந்து வெகுதொலைவில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படத்தில் இருக்கும் சிவப்புநிற கப்பல் தண்ணீரில் நிற்பது போல தெரியவில்லை, வானத்தில் மிதப்பது போன்று தெரிகிறது. மேலும் இந்த படத்தை நன்று உற்றுநோக்கி பார்ப்பவர்களுக்கு மட்டுமே மேகக் கூட்டங்களினால் கப்பல் மறைக்கப்பட்டிருப்பது தெரியும்.
திடீரென்று புகைப்படத்தை காண்பவர்களுக்கு காற்றில் கப்பல் மிதப்பது போன்று தான் தெரியும். இணையத்தில் இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புகைப்படம் எடுத்தவரை பாராட்டி வருகின்றனர். ஆனால் சிலர் இது கிராபிக்ஸ் காட்சியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதாவது கப்பலின் பாதி பகுதியை மறைத்து மேல் பாகம் மட்டும் தெரியும் வகையில் அதிசயமாக புகைப்படம் அமைந்திருப்பதை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.