எனது வாட்ஸ் அப் உரையாடலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தவறாக சித்தரித்து உள்ளதாக ஆரியன் கான் தெரிவித்துள்ளார்.
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்யன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தவறாக சித்தரித்து உள்ளனர்.
அவர்கள் கொடுக்கும் விளக்கம் கற்பனையானது. இவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னிடம் இருந்து எந்த போதைப் பொருளையும் அவர்கள் கைப்பற்றவில்லை. கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மனு வருகிற 26-ஆம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.