Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட அம்மா பெயர டேமேஜ் பண்ணிட்டாங்க” பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிஷ்டலட்சுமி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தன்னுடைய மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு அர்ச்சனா மாறியதும் அவருடைய மகள் சாரா என்னுடைய அம்மாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் தவறான முறையில் சித்தரித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் என்னுடைய அம்மாவின் உண்மையான கேரக்டரை காட்டாமல் அவரை பிக் பாஸ் வீட்டில் ஒரு வில்லி போல் காட்டியதால் சோசியல் மீடியாவில் என்னுடைய அம்மா கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது என்று கடுமையாக சாடியுள்ளார்.

Categories

Tech |