Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை வாழவைக்கும் தெய்வங்கள்… நன்றி தெரிவித்த ரஜினி…!!!

இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று என்னை வாழ்த்திய முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பியவர்களுக்கும், சகா திரை கலைஞர்களுக்கும், உற்சாகத்துடன் என் பிறந்தநாளை கொண்டாடி வரும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |