என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சி தலைவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது, மதம் ஜாதி பெயரில் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்று கோவை போத்தனூரில் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக என்றும் அரணாக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.