போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் மீராமிதுன். அண்மையில் பட்டியலின சமூகத்தவர் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் மீரா மிதுன் மீது பதியப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு முன்பாக இவர் மாடலாக இருந்தபோது அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக தொழிலதிபர்கள் ஜோ மைக்கல் என்பவர் மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டுமொருமுறை கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.
எழும்பூர் போலீசார் இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தனக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் வரவில்லை எனவும் நீதிபதியிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீரா மீது மீது மொத்தம் உள்ள 4 வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டியலினத்தவர் அவதூறாக பேசியது தொடர்பாக விடுதலை கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் மட்டும் அவருக்கு இன்னும் ஜாமின் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.