தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் நன்னாளில் நேரில் வந்து என்னை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர் திருநாளில் உங்களில் ஒருவனாக என்னை நீங்கள் இல்லம் தேடி வந்து சந்திப்பது வழக்கம். அது உங்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கு பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கும்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொங்கல் நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதுவே நீங்கள் எனக்கு தரும் இணையிலா பொங்கல் பரிசு. மேலும் தொண்டர்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமே பொங்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.