தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை.
என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் அவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்கிறார். என்னை அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த நிலையில்செய்தியாளர்களை சந்தித்த திவ்யாவின் கணவர் அர்னாவ, என்னுடைய மனைவியை அடிக்கவில்லை. என்னுடைய குழந்தையை கலைப்பதற்காக ஒரு திட்டத்தோடு நான் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு பின்னணியில் ஆர்டிஸ்ட் ஈஸ்வரன் இருப்பதாகவும் அவர் எங்களுக்குள் உள்ள சிறிய பிரச்சினைகளை பெரிதாக்குவதாகவும் கூறினார். எங்களுக்கு திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிறது.
திவ்யா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் விவாகரத்து தொடர்பான அறிக்கையையும் திருமணத்திற்கு முன்பாக தான் கொடுத்தார். திவ்யாவுக்கு ஆறு வயதில் குழந்தை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி விட்டார். நான் புகார் கொடுக்கவில்லை. பிரிந்து வாழ்வது பற்றி எந்த முடிவு எடுக்கவில்லை. ஈஸ்வர் தன்னை கொச்சை வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் காவல்துறையை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திவ்யா தன்னை தாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார்