Categories
மாநில செய்திகள்

“என்னை சாப்டான முதல்வர் என்று சொல்லக்கூடாது” திடீரென பொங்கி எழுந்த ஸ்டாலின்…. அதிகாரிகளுக்கு போட்ட அதிரடி ஆர்டர்….!!!!

போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காததால் போதை பொருள் விற்பனையானது அதிகரித்துள்ளது என்றார். அதன் பிறகு போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என்றும், போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைவாக இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை தமிழகத்தில் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்‌. இந்த போதைப் பொருட்களை தடுக்காவிட்டால், எதிர்காலமானது வீணாகிவிடும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாட்சப், டெலிகிராம் போன்ற இணையதளங்கள் மூலமாக இணைத்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தகவல்கள் பரவி வருவதால், நுண்ணறிவு போலீசார் கவனமுடன் இருக்க வேண்டும்.

நம்முடைய அரசாங்கத்தின் முக்கிய கடமை போதைப்பொருள் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது. தங்களுடைய குழந்தைகள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந்த கடமை பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உண்டு. இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை. நான் சாப்டான முதல்வர் என்று யாரும் சொல்லி விட வேண்டாம். நேர்மையான நபர்களுக்கு மட்டும் தான் நான் சாப்டான முதல்வர். போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு துணை போவோரின் மீது நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். எனவே அதிகாரிகள் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்காமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மேலும் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் என்பது அறவே இருக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் கூறினார்.

Categories

Tech |