டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள கோலி, இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்ல தன்னை கண்டெடுத்தது தோனி என்று கூறி உருக்கத்துடன் நன்றி கூறியுள்ளார்.
தனது ரசிகர்கள், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், டெஸ்ட் கேப்டனாக சந்தித்த தாழ்வுகளிலும், நம்பிக்கையையும், முயற்சியையும் ஒருபோதும் குறைத்ததில்லை என்று கூறியுள்ளார்.