Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னை காதலிக்க மாட்டியா….? வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 21 வயதுடைய நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கழுத்தை அறுத்துக் கொண்டும், மாணவியின் மோதிரத்தை வாங்கி கொண்டு தன்னை காதலிக்குமாறு நாகராஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மாணவியை நாகராஜ் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நாகராஜை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது கோபமடைந்த நாகராஜ் பாட்டிலால் மாணவியின் தந்தை கையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனால் காயமடைந்த மாணவியின் தந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |