சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.