Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டான்” காதலன் வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட திருமணமான பெண்….. போலீஸ் விசாரணை…!!

திருமணமான பெண் காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழரசன்(28) என்ற மகன் உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி ஹேமாபிரியா(29) புகழரசனின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் ஹேமபிரியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமபிரியா திருநாவுக்கரசை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் புகழரசன் கடந்த ஒரு ஆண்டாக ஹேமபிரியாவிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் தற்போது திருமணம் செய்து கொள்ள அவர் மறுப்பு தெரிவித்ததால் ஹேமபிரியா அவரது வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |