Categories
அரசியல்

என்னை அப்படி சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது…. சசிகலா அதிரடி….!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என சசிகலா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் முகமது ஷெரீப்  மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தீவிர விசுவாசி ஆவார். இந்த திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். இவர் மணமக்களை வாழ்த்திய பிறகு அ.தி.மு.க கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய கதையை கூறினார். அதாவது அ.தி.மு.க கட்சி என்பது ஒரு பெரிய ஆலமரம் ஆகும்.

இந்த ஆலமரத்தில் ஏராளமான பறவைகள் வந்து தஞ்சம் அடைந்துள்ளது. இதில் ஒரு சில பறவைகள் தன் வயிறு மட்டும் நிறைந்தால் போதும் என சுயநலத்தோடு இருக்கிறது. இந்த பறவைகளால் மரத்திற்கும், மற்ற பறவைகளுக்கும் எந்தவித பயனும் ஏற்படாது. அதே நேரத்தில் வேறு சில பறவைகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்தாலும் கூட அந்த பறவைகளால்  மரத்திற்கும், மற்ற பறவைகளுக்கும் நன்மை ஏற்படும்‌.

இதுபோன்று ஆலமரமாய் நிலைத்து நிற்கும் கட்சியில் பறவைகளாய் இருக்கும் தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கிறேன். அதன் பிறகு அம்மா என்று சொல்லித் திரியும் சில பொய் முகங்களுக்கு மத்தியில் உண்மையான தொண்டர்களுக்கு கட்சியில் கண்டிப்பாக இடம் உண்டு. இதைத் தொடர்ந்து பேசிய சசிகலா, அ.தி.மு.க கட்சி கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என சிலர் சொல்கின்றனர். ஆனால் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கான உரிமை யாருக்குமே கிடையாது.

அப்படி சொல்பவர்கள் தி.மு.க கட்சியினருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கலாம். இதனையடுத்து அ.தி.மு.க கட்சியின் மீது உண்மையான பற்று உள்ளவர்கள் அதற்காக பாடுபடுவார்களே தவிர கட்சியை பலப்படுத்தும் காரியங்களை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். இந்த கட்சியில் 38 ஆண்டுகளாக நான் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அதே சோதனை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. அன்று 2 பெண்கள் சேர்ந்து 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.கவை உருவாக்கி காட்டினோம்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம் தள்ளிவிட்டு கட்சிக்காக பாடுபடுங்கள் என சசிகலா கூறினார். இதைத் தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தி.மு.க வாக்குறுதிகளை வாரி இறைத்தது. ஆனால் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன் பிறகு சென்னை பெருநகர காவல்துறையை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதை உருவாக்கியது ஜெயலலிதா என்றாலும், அன்று ஒரு கமிஷனர் மட்டுமே இருந்தார்.

ஆனால் தற்போது 3 பேரை பணியமர்த்தி உள்ளனர். இதனால் ஒரு இடத்தில் குற்றம் செய்பவர்கள் மற்றொரு இடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றனர். அதன் பிறகு தி.மு.க ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டது. மேலும் தி.முக. சொல்லும் திராவிட மாடல் என்ன என்பது எனக்கு புரியவில்லை என கூறிய சசிகலா, மீண்டும் அம்மா வழியில் அ.தி.மு.க ஆட்சியை நிறுவுவோம் என கூறினார்.

Categories

Tech |