ரோஹித்திடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்..
இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இந்த காலண்டர் ஆண்டில் ஏராளமான டி20 ஐ விளையாடியதால், கேப்டன் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக தனது முதல் ஐசிசி பட்டத்தை பார்க்க வேண்டும் என்று துடியாக இருக்கிறார்.
இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் இந்திய நிரப்படி காலை 9.30 மணி அளவில் மோதுகின்றன.. அதேபோல மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் பிற்பகல் 1:30 மணி அளவில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த டி20 உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இணைந்து செய்துள்ளன.
இப்போட்டி நடைபெறுவதற்கு முன் ஐசிசியின் சார்பில் 16 நாடுகளின் கேப்டன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளுடைய கேப்டன்களும் கலந்து கொண்டனர்.. உலக கோப்பையின் பயிற்சிகள் மேற்கொண்டது மற்றும் அணியை பற்றி ஒவ்வொரு கேப்டன்களும் செய்தியாளரிடம் பேசினார்கள்.. போட்டிகளின் போது அவர்கள் சந்திக்கும் போது வழக்கமாக என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது பற்றி இந்திய கேப்டன் ரோஹித் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இருவரிடமும் கேட்கப்பட்டது.
அப்போது பாபர் அசாம் பேசியதாவது, “நாங்கள் கிரிக்கெட் பற்றி பேசவே இல்லை”. “ரோஹித் பாய் என்னை விட மூத்தவர். நான் அவரிடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார், அவரிடமிருந்து என்னால் முடிந்ததை எடுக்க முயற்சிக்கிறேன்,” என்று தாழ்மையாக கூறினார்.
அதேபோல ரோஹித் சர்மா பேசியதாவது, “பாபர் சொல்வது முற்றிலும் சரி. விளையாட்டின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் அதைப் பற்றி பேசி உங்களுக்குள் அந்த அழுத்தத்தை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், நாங்கள் ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி கேட்கிறோம். அவருடைய அணியினர் அனைவரையும் நான் சந்தித்தேன் என்றார்.
மேலும் “நமது முன்னாள் வீரர்கள் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எங்களிடம் சொன்னார்கள். இது பொதுவாக’ அவர்களின் குடும்பம் எப்படி இருக்கிறது, அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, நீங்கள் என்ன புதிய கார் வாங்கியிருக்கிறீர்கள், வாங்கப் போகிறீர்கள்’ என்று கேட்பதாக ரோஹித் சிரித்துக் கொண்டே கூறினார்.
அனைத்தும் நாடுகளின் கேப்டன்களும் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். மேலும் பாபர் அசாம் நேற்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அனைத்து அணிகளின் கேப்டன்கள் முன்னிலையில் கேக் வெட்ட, அவர்கள் வாழ்த்து சொல்ல நெகிழ்ந்து போனார்.. இந்த புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Happy birthday @babarazam258 🎂
That cake looks good! 😋#T20WorldCup pic.twitter.com/JFNeBLoVg5
— ICC (@ICC) October 15, 2022
https://twitter.com/AvinashArya09/status/1581131023597076481
Why did #RohitSharma clap for Babar Azam? #CricketWorldCup https://t.co/W6gkOA2eUq pic.twitter.com/XHWBmMbjcO
— Vimal कुमार (@Vimalwa) October 15, 2022